தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் மறுப்பு தெரிவித்த பாஜக வேட்பாளர்..!!

தமிழ்நாட்டை போன்று கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.

கேரளாவில் பாஜகவின் நிலை என்னவென்று அனைவரும் அறிந்தது தான்.

தமிழகத்தில் அதிமுகவை பிடித்து மேலே வரும் பாஜக ஒருநாள் அதிமுகவை பாஜகாவாக மாற்றும் என பலரும் கூறுகின்றனர். ஆனால் கேரளாவில் அதற்கு கூட வழியின்றி திணறி வருகிறது பாஜக.

கேரளாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் ஒரே ஒரு எம்எல்ஏ வெற்றிபெற்றார்.

இந்த தேர்தலில் அதுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டசபைத் தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அவற்றில் 85 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், கோணி மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

மேலும் நடிகர்களான நடிகர் கிருஷ்ணகுமார் திருவனந்தபுரத்திலும், நடிகர் சுரேஷ்கோபி திருச்சூரிலும், சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த மெட்ரோமேன் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

இந்தநிலையில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக மணிகண்டன் என்கிற மணிக்குட்டன் அறிவிக்கப்பட்டார்.

பாஜக தன்னை வேட்பாளராக அறிவித்ததைத சில மணி நேரம் கழித்து தெரிந்துகொண்ட அவர், என்னது நான் பாஜக வேட்பாளரா? நான் பாஜக கட்சியிலேயே கிடையாது என கூறி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

கேரள வெட்னரி அண்ட் அனிமல் சயின்ஸ் யுனிவர்சிட்டியில் டீச்சரிங் அசிஸ்டென்ட் வேலை செய்துவருகிறார். 31 வயதான மணிகண்டன். தொலைக்காட்சி பார்த்துத்தான் என்னை வேட்பாளராக அறிவித்ததைத் தெரிந்துகொண்டேன்.

மணிக்குட்டன் என்ற எனது முகநூல் பெயர், வேட்பாளர் பட்டியலில் வந்தது.

அதன் பிறகு மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஜே.பி நிர்வாகிகள் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்த பிறகுதான் முழு விவரமும் தெரியவந்தது.

சட்டசபைத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எனது கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை செய்து, குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறேன்.

நான் பி.ஜே.பி அனுதாபி அல்ல. எனவேதான் பி.ஜே.பி அறிவிப்பை மகிழ்ச்சியோடு நிராகரித்தேன் என அவர் கூறியிருக்கிறார்.

இதனால் கேரள அரசியலில் சிறிது நகைச்சுவை ஏற்பட்டதுடன் பாஜகவோ அதிருப்தி அடைந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே