பாடகர், நடிகர் என பன்முகத்தன்மைக் கொண்ட முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அவரது தந்தை இறந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவிற்கு 52 வயதாகிறது. நேற்று மாலை 6.20 மணியளிவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.

அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிக்பாஸ் பிரபலங்கள், திரைத்துறையினர் அனைவரும் தங்களுடைய இன்ஸ்ட்ராகிராம், ட்விட்டர் பக்கங்களில் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் பிக்பாஸ் சீசன் 3யில் முகெனுடன் போட்டியிட்ட அபிராமியும் தன்னுடைய ட்விட்டரில் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் பிரகாஷ் ராவ். தைரியமாக இரு பேபி என முகென் ராவுக்கு ஆறுதல் தரும்படி பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே