பிக்பாஸ் வெற்றியாளரும், நடிகருமான ஆரவ் அவர்களின் தந்தை இயற்கை எய்தினார்.

பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆரவ். முதல் சீசனிலேயே இவருக்கு ஏராளமான பெண்கள் ஃபேன்ஸ் குவிந்ததால், அந்த சீசனின் டைட்டில் வின்னரும் ஆனார்.

பிக் பாஸுக்கு மாடலிங் செய்து வந்த ஆரவ், தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில், தான் காதலித்த பெண்ணை கரம் பிடித்தார் ஆரவ்.

இந்த நிலையில், உடலுறுப்புகள் செயலிழந்திருந்த நிலையில் இருந்த ஆரவ்வின் தந்தை இன்று அதிகாலை 1.30 மணிக்கு காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான நாகர்கோவிலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரவ்வின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே