பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் ராணா டகுபதி. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகரான ராணா டகுபதி கடந்த சில மாதங்களாக ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஒரு பெண்ணுடன் இணைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார். அந்த பெண் ஹைதராபாத்தை சேர்ந்த நியூ டாப் டிசைன் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தின் மிஹீகா பஜான் என்பவர் தான்.
இவருடன் காதலில் இருந்து வந்தார் ராணா. இந்நிலையில் இருவர் வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இருவரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி திருமணம் நடத்த தயாராகி உள்ளனர். மேலும், இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமே அழைப்பதாகவும் இந்த இணை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இவர் தமிழ் நடிகை திரிஷாவுடன் காதலில் இருந்த ராணா அதன் பின்னர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

