வாடிவாசல் – ஜல்லிக்கட்டு களத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன்..!!

விடுதலை திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சி.சு.செல்லப்பா எழுதிய வாடி வாசல் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு வாடி வாசல் திரைப்படம் எடுக்கப்படுகிறது.

சூரரைப் போற்று படத்துக்கு பிறகு சூர்யா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக அண்மையில் கருணாஸ் இணைந்திருந்தார்.

படத்தின் வேலைகள் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாடிவாசல் படத்துக்கான டெஸ்ட் ஷூட்டிங் நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளஙகளில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே