#BeirutBlast : 30 நொடியில் 3,00,000 பேர் வீட்டை இழந்த அவலம்!

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய விபத்தின் எதிரொலியாக 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பெய்ரூட் கவர்னர் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட் துறைமுக பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடையுடைய அம்மோனியம் நைட்ரேட் நேற்று (செவ்வாய்க் கிழமை) இரவு வெடித்துச் சிதறியது.

பயங்கர சத்ததுடன் நிகழ்ந்த இந்த வெடிவிபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே இது குறுத்து பெய்ரூட் கவர்னர் மர்வான் அபூத் கூறியதாவது, பெய்ரூட் துறைமுக பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 3,00,000 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 

வெடிவிபத்தால் துறைமுக பகுதியில் 30 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே