ஹிட்மேன் ரோகித் சர்மாவிற்கு விருது! இந்திய அரசிற்கு பிசிசிஐ பரிந்துரை!

இந்தியா ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று பிசிசிஐ இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்திய வீரர் ரோகித் சர்மாவிற்கு 2019ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இஷாந்த் சர்மா, ஷிகர் தவான் தீப்தி ஷர்மா உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருதை வழங்க இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்திற்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்துள்ளார் . டி20 தொடரில் 4 சதங்கள் அடித்த ஒரே ஒரு வீரர் இவர் தான். அதனை தாண்டி ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே ஒரு வீரர் இவர்தான். எட்டு முறை 150 நாட்களுக்கு மேலாக அடித்துள்ளார். இப்படி அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்திய அணிக்காக 224 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 9115 ரன்களை விளாசியுள்ளார். இதன் சராசரி 49.30 ஆகும். இதில் 29 சதங்கள் 43 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 264 ரன்கள் விளாசியுள்ளார். டி20 போட்டிகளில் 108 போட்டிகளில் விளையாடி 2773 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள் 21 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 118 ரன்கள் எடுத்துள்ளார்.

Related Tags :

rohit sharma | RajivGandhiKhelRatna

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே