பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதால் பரபரப்பு!

சித்தார்த்நகர் மாவட்டம் சோனோரா கிராமத்தில் சிலர் வழக்கம்போல கட்டுமான பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது ஒரு கட்டடத்தின் அருகில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அழுகுரல் வந்த திசையை நோக்கி மக்கள் தேட ஆரம்பித்தனர்.

அப்போது அங்கிருந்த மணல் குவியலில் இருந்து சத்தம் வருவதை கண்டறிந்தனர்.

அங்கு குழந்தையின் கால் மட்டும் வெளியே தெரிவதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அந்த இடத்தில் தோண்டி பார்த்த போது ஆண் குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தை மணலை விழுங்கியிருப்பதாகவும், அதனால் மூச்சுக்குழலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தீவிர சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

குழந்தையை மீட்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் புதைக்கப்பட்டது போல் தெரிவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குழந்தையை உயிருடன் புதைத்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளதாகவும்; குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே