பாகுபலி இயக்குநர் ராஜமெளலிக்கு கொரோனா தொற்று !!

உலக புகழ்பெற்ற பாகுபாலி படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

அதிலும் ஆந்திர பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,20,390 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வரும், பாகுபாலி படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் மட்டுமின்றி அவரின் குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இயக்குனர் ராஜமௌலி டிவிட் செய்துள்ளார். 

அதில், எனக்கும் என்னுடைய குடும்பத்தினந்தருக்கும் சில நாட்களுக்கு முன் லேசான காய்ச்சல் ஏற்பட்டது .

அதன்பின் காய்ச்சல் குணமடைந்துவிட்டது. இருந்தாலும் நாங்கள் கொரோனா சோதனை செய்து கொண்டோம்.

அதில் எங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

லேசான கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாங்கள தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.

எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை நன்றாகவே இருக்கிறோம்.

உடலில் ஆண்டிபாடி உருவாக காத்துகொண்டு இருக்கிறோம். உடல் நலம் சரியான உடன் வேகமாக, பிளாஸ்மா தானம் கொடுக்க தயாராக இருக்கிறோம், என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே