Coronavirus | மார்ச் 31ம் தேதி மேலும் 457 பேர் மரணம்- 2021-ல் இந்தியாவில் அதிக கொரோனா மரணங்கள்

புதனன்று இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் 457 பேர் பலியாகியுள்ளனர். இது டிசம்பர் 17ம் தேதிக்குப் பிறகு அதிக மரணமாகும்.

புதனன்று இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் 457 பேர் பலியாகியுள்ளனர். இது டிசம்பர் 17ம் தேதிக்குப் பிறகு அதிக மரணமாகும்.

டிசம்பர் 17-ல் 355 பேர் மரணமடைந்ததற்குப் பிறகு புதனன்று 457 பேரை கொரோனா காவு வாங்கியுள்ளது. 2021-ல் ஒரேநாளில் அதிகம் பலியானதும் புதனன்றுதான்.

நேற்று இரவு 10 மணியளவில் அனைத்து மாநிலச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படிதான் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 227 பேர் பலியாகியுள்ளனர். பஞ்சாபில் 55 பேர் பலியாகி 2ம் இடத்தில் உள்ளது.

கோவிட் 19 வைரஸ் மரணம் மொத்தம் 1,62,959- ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மரண விகிதத்தில் 4ம் இடத்தில் உள்ளது இந்தியா.

மேலும் தினசரி தொற்று விகிதமும் கடுமையாக அதிகரித்து புதனன்று 72,019 பேருக்கு புதிதாகத் தொற்றியுள்ளது. இதிலும் மகாராஷ்டிராதான் முதலிடம். புதனன்று 39,544 பேருக்கு புதிதாகத் தொற்றியுள்ளது.

சத்தீஸ்கர், கர்நாடாகவில் முறையே 4,563 மற்றும் 4225 பேருக்கு முறையே தொற்றியுள்ளது. கொரோனா முதல் அலையில், இந்தியாவில் செப்டம்பர் 2020-ன் மத்தியில் ஒரேநாளில் அதிகபட்சமாக 98,000 பேருக்குத் தொற்றியது.

கொரோனாவுக்காக இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,80.327. இதில் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்கள் 80% பங்களிப்பு செய்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சத்து 72 ஆயிரத்து 462 ஆக உள்ளது.

தமிழகத்தில் முதல் கொரோனா அலை தணிந்து தினசரி பாதிப்பு 300-400 என்ற அளவில் இருந்தது. தற்போது மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது, தினசரி பாதிப்பு 2000-த்தைக் கடந்து விட்டது. இதற்கிடையே கேரளா, மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட மரபணு மாறிய கொரோனா வகைமாதிரியினால் தமிழகத்துக்கும் கூடுதல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தற்போது தினசரி 34 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதை 40-45 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்.

இந்நிலையில் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் வகை புதிய கொரோனா உருமாறிய வைரஸ் அச்சுறுத்தலை விட இந்திய வைரஸ் பரவும் தன்மை அதிகம் கொண்டது என்று புனே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.. முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கால்களை சோப்புநீரில் கழுவுதல் போன்ற அடிப்படைகளைக் கைவிடாமல் கடைப்பிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே