தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

கரூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொடங்கிவைத்தார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் விடுதலின்றி சேர்த்து வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடைமையாற்றி தவறாமல் வாக்களித்து நல்லாட்சியை அமைத்திட உறுதியாக இருத்தல் வேண்டும், வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், வாக்களிக்க தயார் என்போம் என்பதை வழியுறித்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, தாந்தோணிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி வரை நடைபெற்ற இப்பேரணியில் தாந்தோணி அரசு கலைக்கல்லூரி மற்றும் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்க்கோட்டாட்சியர் சந்தியா, வட்டாட்சியர் பிரபு (தேர்தல் பிரிவு), நகராட்சி ஆணையாளர் சுதா உள்ளிட்ட அலுவலர்கள் மாணவ-மாணிவகள் பலர் கலந்துகொண்டனர்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே