இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாலேயே நடக்கின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அரசு புதிய எச்சரிக்கை விடுத்தது.

அதன்படி புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும் என போக்குவரத்துத் துறைச் செயலாளர் அசோக்குமார் எச்சரித்துள்ளார்.

மேலும் காரில் சீட் பெல்ட் அணியாததற்கு ரூ.1000, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய், உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம், சிக்னல் ஜம்பிங் ரூ.1000 அபராதம் அல்லது ஓராண்டுக்கு குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே இனி வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த விதி முறைகளைப் பின்பற்றிதான் வாகனங்களை ஓட்ட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீறும் பட்சத்தில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தலைக்கவசம் அணிவதன் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் பின் நடவடிக்கை முதல்வர் பழனிசாமி அறிவுறுத்திருந்தார்.

ஆனால், வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும், பிடிக்கப்படும் பைக்குகளுக்கு அபராதம் செலுத்தினால் மட்டுமே விடுவிக்கப்படும் என போலீசார் உறுதியாக கூறுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே