அரக்கோணம் அருகே ஏடிஎம் இயந்திரத்துடன் பணத்தை கொள்ளையடித்தவர்களை பிடிக்க போலீசார் 6 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பெருங்களத்தூர் என்ற பகுதியில் தனியார் வங்கி சார்பில் ஏடிஎம் மையம் உள்ளது இந்தப் பகுதி ராணிப்பேட்டை – திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளது. நேற்று காலை வங்கியில் இருந்து வந்த அலுவலர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் 8.5 சைபர் லட்சம் ரூபாயை நிரப்பினார்.
இந்நிலையில் இன்று காலை அந்த வங்கியில் பணம் எடுக்க சிலர் வந்தனர் அப்பொழுது வங்கி ஏடிஎம் அடைக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தின் பக்கத்தில் உள்ள சுவற்றை தொலைத்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து வெல்டிங் மிஷின் ஐ பயன்படுத்தி இதயத்தின் உள்ளே பணம் உள்ள பெட்டியை பணத்துடன் சேர்த்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் 3.9லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசாரை கேட்டதற்கு இரு மாவட்ட எல்லையில் ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள இந்த ஏடிஎம் மையத்திற்கு காவலாளி இல்லை. இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு யாரும் வர மாட்டார்கள்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு பேட்டரியில் இயங்கும் ரம்பம் மற்றும் வெல்டிங் மிஷின் ஐ பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளனர்.
அப்பொழுது அங்கிருந்த சிசிடி கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர்.
ஆனால் ஒரு கேமரா மட்டும் கிடைக்கவில்லை. அந்த கேமராவை வைத்துதான் ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இன்னமும் சம்பவம் நடந்த இடத்திற்கு வரவில்லை என போலீசார் வருத்தத்துடன் தெரிவித்தனர்.