தெறிக்க விடும் அம்சங்களுடன் ஆசஸ் ஜென்ஃபோன் 7; இவ்ளோ கம்மி விலைக்கா?!

ஜென்ஃபோன் தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ஆசஸ் நிறுவனம் தயாராக உள்ளது. அது ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஆகும். இதன் எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள் பற்றிய விவரங்கள் இதோ…
ஆசஸ் நிறுவனம் அதன் ஜென்ஃபோன் தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது ஜென்ஃபோன் 7 மாடல் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் குறித்து இதுவரை எங்களுக்கு கிடைத்த மொத்த தகவல்களையும் ஒன்றாக திரட்டி இங்கே வழங்கியுள்ளோம். அதாவது இது எப்போது அறிமுகம் ஆகும்? என்ன விலைக்கு அறிமுகம் ஆகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.
டி.என்.என் வலைத்தளத்தின் அறிக்கையின்படி, ஜென்ஃபோன் 7 ஆனது ROG போன் 3 ஐ விட மலிவானதாக இருக்கும், இது ஆசஸின் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆகும், இது ஜூலை 22 அன்று அறிமுகமாக உள்ளது.

ஆசஸ் ROG போன் 3 பற்றி பேசுகையில் இது 6.59 இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும், இது 1080 x 2340 பிக்சல்கள் முழு எச்டி+ தீர்மானம் மற்றும் 19.5: 9 அளவிலான திரை விகிதம் ஆகியவைகளை கொண்டிருக்கும். மேலும் இது 144Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வர வாய்ப்புள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும், இதில் 64 மெகாபிக்சல் பிரதான கேமராவும் அடங்கும், இது அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸுடன் அமரும். முன் பக்கத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளை கவனித்துக்கொள்ள 13 மெகாபிக்சல் ஸ்னாப்பர் இருக்கும். இது டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உடன் வரும்.
ஜென்ஃபோன் 7 மாடலை பற்றி பேசினால், இது ஃபிளிப் கேமரா வடிவமைப்பை கொண்டு செல்லும் என்று ஊகிக்கப்படுகிறது, அதில் டூயல் கேமராக்கள் இடம்பெறும். இந்த அமைப்பை முன் பக்க கேமராவாகவும்,அதே சமயம் பின்பக்க கேமராவாகவும் மாற்ற முடியும். இம்மாதிரியானதொரு அமைப்ப சரியாக செய்த ஒரு மாடலாக ஜென்ஃபோன் கருதப்படுகிறது.

ஏனெனில் ரெட்மி கே 20 ப்ரோ மற்றும் சாம்சங் ஏ 80 ஆகியவைகளும் ஃபிளிப் கேமரா கொண்ட வேறு சில ஸ்மார்ட்போன்களாக இருக்கும் போதும் கூட கேமரா நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை, ஜென்ஃபோன் 6 மிகவும் நன்றாக இருந்தது. இது எஃப் / 1.79 லென்ஸ் கொண்ட 48 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 125 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 13 எம்பி செகண்டரி சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருந்தது, இவை இரண்டையுமே செல்பீ மற்றும் வீடியோ கான்பரன்சிங்கிற்கும் பயன்படுத்தப்படலாம்.

ஸ்மார்ட்போன்களுக்கான தரப்படுத்தல் வலைத்தளமான கீக்பெஞ்சின் கூற்றுப்படி, ஜென்ஃபோன் 7 குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC, 16 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
குவால்காம் நிறுவனமும் ஜென்ஃபோன் 7 ஆனது 865 SoC உடன் வரும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஐபிஎஸ் எல்சிடி இருப்பதாகவும் வதந்தி பரவியுள்ளது. மேலும் அது 1080 x 2400 பிக்சல்கள் மற்றும் 411 பிபிஐ பிக்சல் அடர்த்தியை கொண்டிருக்கலாம். இது 5000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.34,999 ஆக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது, அதாவது இதன் முன்னோடியை விட அதிக விலைக்கு அறிமுகமாகலாம். ஆசஸ் ஜென்ஃபோன் 6 அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு நல்ல பதிலைப் பெற்றது.

ஏனெனில் அந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 640 ஜி.பீ.யுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர், 6.4 அங்குல முழு எச்டி + நானோ எட்ஜ் டிஸ்ப்ளே 2340 x 1080 பிக்சல்கள், 19.5: 9 திரை விகிதம், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே