ரியல்மி X3 அறிமுகம்: கனவில் கூட எதிர்பார்க்காத விலை; ஜூன் 30 முதல் விற்பனை!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அதன் ரியல்மி எக்ஸ் 3 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடரின் கீழ் ரியல்மி எக்ஸ் 3 மற்றும் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் என்கிற இரண்டு மாடல்கள் அறிமுகமாகி உள்ளன.

ரியல்மி எக்ஸ் 3 தொடரின் இரண்டு புதிய மாடல்களுமே 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் டூயல் செல்பி கேமராக்களுடன் வருகின்றன.

மேலும் ரியல்மி எக்ஸ் 3 தொடர் ஸ்மார்ட்போன்கள் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC ப்ராசஸர் மற்றும் எட்டு மில்லிமீட்டர் விட்டம் கொண்ட நீராவி குழாய் கொண்ட லிக்விட் கூலிங் சிஸ்டமையும் கொண்டுள்ளது.

இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையிலான வேறுபாட்டை பொறுத்தவரை, ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் ஆனது 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூமை வழங்க பெரிஸ்கோப்-ஸ்டைல் லென்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது. அதே சமயம் ரியல்மி எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் டெலிஃபோட்டோ லென்ஸைக் கொண்டுள்ளது. இக்கட்டுரையில் நாம் ரியல்மி எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ் 3 விலை, வண்ணங்கள் மற்றும் விற்பனை:

இந்தியாவில் ரியல்மி எக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.24,999 க்கும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.25,999 க்கும் வாங்க கிடைக்கும்.

ரியல்மி எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது ஆர்க்டிக் ஒயிட் மற்றும் க்ளேஸீயர் ப்ளூ என இரு வேறுபட்ட வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூன் 30 மதியம் 12 மணிக்கு (நண்பகல்) பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வழியாக நடைபெறும். இதன் முன்பதிவு இன்று இரவு 8 மணிக்கு திறக்கப்பட்டு வருகிற ஜூன் 27 வரை தொடரும். இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் கடைகள் வழியாக வரும் வாரங்களில் விற்பனை செய்யப்படும்.

ரியல்மி எக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:

  • 6.6 இன்ச் முழு எச்டி+ (1,080×2,400 பிக்சல்கள்) அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே
  • 20: 9 என்கிற அளவிலான திரை விகிதம்
  • 90.5 சதவீத ஸ்கிரீன்-டு -ஒரு விகிதம்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • டூயல் சிம் (நானோ) ஆதரவு
  • ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC ப்ராசஸர்
  • அட்ரினோ 640 ஜி.பீ.யு
  • 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
  • 128 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 பூஸ்ட் ஆன் போர்டு ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக விரிவாக்கத்தை ஆதரிக்காது
  • குவாட் கேமரா அமைப்பு
  • 64 மெகாபிக்சல் சாம்சங் ஜி.டபிள்யூ 1 முதன்மை சென்சார் (எஃப் / 1.8)
  • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர்
  • 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
  • 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவு (எஃப் / 2.5) கொண்ட 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ்
  • டூயல் செல்பீ கேமரா அமைப்பு
  • 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 கேமரா சென்சார் (எஃப் / 2.0)
  • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர்
  • 4 ஜி
  • வைஃபை 802.11 ஏசி
  • ப்ளூடூத் வி 5.0
  • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • ஆக்ஸலரோமீட்டர்
  • ஆம்பியண்ட் லைட்
  • கைரோஸ்கோப்
  • மேக்னட்டோமீட்டர்
  • ப்ராக்ஸிமிட்டி சென்சார்
  • பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
  • டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்பங்கள்
  • 30W டார்ட் ஃப்ளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
  • 4200 எம்ஏஎச் பேட்டரி
  • 163.8×75.8×8.9 மிமீ அளவுகள்
  • 202 கிராம் எடை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே