லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய வெடி விபத்து நடந்தது. இந்த விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், லெபனான் நாட்டில் விபத்தினை ஏற்படுத்திய அமோனியம் நைட்ரேட், என்னும் வேதிப்பொருள் தமிழகத்தின் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை குறிப்பிட்டு எச்சரிக்கும் விதமாக டாக்டர் ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், “சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!
சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.
அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!” என பதிவிட்டுள்ளார்.