அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை 11 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக வேட்பாளர் அறிவிப்பது, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை 11 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. வரும் 22-ந் தேதி வரை மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.