நீங்க மீன் பிரியரா? அப்போ கண்டிப்பா இது உங்களுக்குத்தான்… படிங்க…

தற்போது சுறா போன்ற குறிப்பிட்ட வகை மீன்களை மக்கள் சாப்பிட்டு வருவதால் அவற்றின் இனங்கள் அழிந்து வருவதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். எனவே மீன்களை உணவிற்காக அதன் இனப்பெருக்க காலங்களில் பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
நிறைய பேருக்கு மீன், கடல் சிப்பிகள் போன்றவை மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். கடல் உணவுகளில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதனால் பெரும்பாலான மக்களின் உணவாக கடல் உணவுகள் திகழ்கின்றன.
ஆனால் தற்போது இந்த கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது உங்களுக்கு தெரியுமா. மேற்கு கடற்கரையில் உள்ள சுறா, இந்திய சாலமன் போன்றவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்னும் எவ்வளவோ கணக்கிடப்படாத உயிரினங்கள் இருக்கின்றன. கடல் உணவு மற்றும் மீன் பிடித்தலின் தேவைகள் அதிகரித்து வருவதால் பெரும்பாலான கடல் மீன்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இதனால் இளம் கடல் ஆராய்ச்சியாளர்கள் அழியக்கூடிய மீன்கள் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற போராடி வருகின்றனர். இந்தியாவின் மேற்கு கடற்கரையில் காணப்படும் மீன்களின் இனப்பெருக்க காலங்கள் மற்றும் பிடிக்கும் மீன்களின் இனப்பெருக்க காலங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.

இந்த மாதிரி மீன்களின் இனப்பெருக்க காலத்தை பற்றி நாம் அறிந்து கொள்வது ஒன்று மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன்களை விட உதவுகிறது. இரண்டு இது இணை சேதத்தைத் தடுக்க உதவுகிறது.

உதாரணமாக, கோவா உட்பட மேற்கு கடற்கரையில் கிங்ஃபிஷ் இனப்பெருக்கம் பற்றிய விஞ்ஞான தகவல்களை அறிந்த பின்னர், மூவரும் மே முதல் நவம்பர் வரை கிங்ஃபிஷ் இனப்பெருக்கம் செய்வதையும், இந்த செயல்முறையின் பெரும்பகுதி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்படுவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே விஞ்ஞானிகள் இந்த மாதங்களில் மக்கள் மீன்களை சாப்பிட வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
சீர்மீன் (சுர்மாய்), சுறா போன்ற மீன்களை உணவிற்காக அதிகமாக பிடிக்கின்றனர். மேற்கு கடற்கரையில் பெரும்பாலான சுறா இனங்கள் மார்ச் முதல் மே வரை இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் சுறா இனப்பெருக்கத்தை இடமளிக்கவும், குறைந்தபட்ச இணை சேதத்தை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு மக்களும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

இதுவரை, கோவா மற்றும் மும்பையில் தலா நான்கு உணவகங்கள் தங்கள் மீன்களை அறிந்து கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உறுதிபூண்டுள்ளன என்று அவர்கள் கூறியுள்ளனர். சாளர சிப்பிகளை தவிர்த்து கடல் உணவு இனங்கள் எதுவும் அச்சுறுத்தப்படவில்லை. என்று கோவாவின் மீன்வளத் துறை கூறினாலும், இதுபோன்ற முயற்சிகளுடன் ஒத்துழைப்பதைக் கருத்தில் கொள்ள தயாராகவும் நாங்கள் உள்ளோம் என்று கூறியுள்ளது.

இதுவரை மழைக்காலத்தில் மீன்பிடிக்க இரண்டு மாத கால தடையை நாங்கள் அமல்படுத்துகிறோம். ஏனெனில் இந்த காலகட்டத்தில் நீரின் உயர்வு மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மீன் வளர்ப்பிற்கு உகந்ததாகும் என்றும் மீன்வளத்துறை இயக்குனர் கூறியுள்ளார். அதே மாதிரி 20 மி.மீ க்கும் அதிகமான கண்ணி அளவுள்ள வலைகளைப் பயன்படுத்துவதையும் நாங்கள் தடை செய்கிறோம் .இதன் மூலம் மீன் இனப்பெருக்கங்கள் அழிவதை தவிர்த்து மீன் இனங்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கமாக செய்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே