நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க ஆயுர்வேதம் சொல்லும் 5 அற்புத டீ என்னென்ன? எப்படி தயாரிப்பது?

ஏராளமான மூலிகைகளைக் கொண்டு நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இந்த மூலிகைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து பருகி வரும் போது நம் நோயெதிரிப்பு சக்தி அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது. அதைப் பற்றி விரிவாக நாம் காண்போம்.
SARS-CoV-2 வைரஸைக் குணப்படுத்த விஞ்ஞானிகள் இரவும் பகலும் போராடி வருகிறார்கள். இந்த கொடிய வைரஸ் உலகெங்கிலும் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதிப்படையச் செய்து உள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த 5 நாட்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன.
இதுவரை இந்த வைரஸ்க்கு தடுப்பூசியும் மருந்துகளுமே கண்டறியப்படவில்லை. அதனால் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி நம் நோயெதிரிப்பு சக்தியை பலப்படுத்துவது மட்டுமே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆயுர்வேத பொருட்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
​நச்சுகள் வெளியேற்றம்
ஆயுர்வேதத்தின் படி அமா (உடல் நச்சுக்கள்) இருந்தால் தொற்றுக் கிருமிகள் நம் உடலில் வளமாக செயல்படும். இதுவே உங்க உடலில் நச்சுக்கள் நீங்கி விட்டால் தொற்றுக் கிருமிகள் பெருக்கெடுப்பதும் குறையும். எனவே நச்சுக்களை வெளியேற்ற நம் உடலில் சீரண சக்தி நடைபெற வேண்டியது அவசியம் ஆகிறது.

எனவே உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர் குறித்து ஆயுர்வேத மருத்துவர் உங்களிடம் பேசுகிறார்.

​இஞ்சி டீ
இஞ்சி டீ தயாரிக்க மிகவும் எளிதானது, இது பசியின்மை, சளி மற்றும் இருமலை போக்க உதவுகிறது. மற்ற வயிற்று பிரச்சனைகளை நீக்குகிறது.

தயாரிக்கும் விதம்

அரைத்த இஞ்சியை 1/2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இஞ்சியை ஒரு கிளாஸ் டம்ளரில் 5-6 நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு இதை வடிகட்டி குடித்து வாருங்கள்.

குறிப்பு : உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகிக் கொள்ளுங்கள்.

​இலவங்கப்பட்டை டீ
இலவங்கப்பட்டை தேநீர் உங்க எடையை குறைக்க பயன்படுகிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்கு எதிராக போராடுகிறது.

எப்படி தயாரிக்கலாம்

1/2 அங்குல இலவங்கப்பட்டையை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு 5-7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். பிறகு அதை வடிகட்டி குடியுங்கள்.

ஆடி விரதத்தின் போது எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும்?

​துளசி டீ
துளசி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இது நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது.

எப்படி தயாரிக்கலாம்

4-5 துளசி இலைகளை எடுத்து 10 நிமிடங்கள் தண்ணீரில் வேக வைக்கவும். பிறகு பாத்திரத்தின் மூடியை திறந்து அதை வடிகட்டி குடியுங்கள்.
​சீரகம் டீ
சீரகம் தேநீர் நம் செரிமானத்திற்கு உதவக்கூடிய ஒன்றாகும். இது கூடுதல் கிலோ எடையை குறைக்க பயன்படுகிறது. இந்த எளிதான டீ தயாரிக்க உங்களுக்கு சீரகம், கொத்தமல்லி விதைகள் மற்றும் வெந்தய விதைகள் தேவைப்படும்.

எப்படி தயாரிக்கலாம்

1/2 டீ ஸ்பூன் சீரகம், 1/2 டீ ஸ்பூன் கொத்தமல்லி விதைகள், 1/4 டீ ஸ்பூன் வெந்தய விதைகள் போன்றவற்றை சேர்த்து தேநீர் தயாரியுங்கள். நன்றாக கொதிக்க விட்டு பிறகு வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்து வாருங்கள்.

​துளசி கருப்பு மிளகு தேநீர்
இந்த தேநீர் ஒரு சிறந்த நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க கூடிய தேநீராகும். இது பருவகால நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது. இந்த தேநீர் தயாரிக்க உங்களுக்கு துளசி இலைகள், கருப்பு மிளகு மற்றும் கிராம்பு தேவைப்படுகிறது.

எப்படி தயாரிக்கலாம்

3-4 துளசி இலைகள், கருப்பு மிளகு, ஒரு கிராம்பு என எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பொருட்கள் அனைத்தையும் 2 கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்து வாருங்கள்.

குறிப்பு

கர்ப்பிணிப் பெண்கள் இந்த தேநீரை பருகுவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே