வாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..!!

இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கூகுளின் ஜிபே மூலம் பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவது தெரிந்தது.

அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பலாம் என்றும் இந்த வசதி இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல வாட்ஸ்அப் பயனாளிகள் பயனடைவார்கள் என்று தெரிகிறது.

இந்தியாவில் ஏற்கனவே சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டாக வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் முயற்சியை அந்நிறுவனம் செய்துகொண்டிருந்தது.

ஏற்கனவே கூகுள் பே, பேடிஎம், போன்பே, போன்ற செயலிகள் பல பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

யுபிஐ அடிப்படையிலான பண பரிமாற்ற முறைக்கு வாட்ஸ் அப் செயலியை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துபவர்களும் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

இதனை உறுதி செய்யும் வகையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைவர் மார்க் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் இனி இந்தியர்கள் சுலபமாக மெசேஜ் அனுப்புவது போல பணம் அனுப்பலாம் என்றும்; இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பி இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே