புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: புதிதாக 47 பேர் பாதிப்பு

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 676 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று(மார்ச் 22) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 519 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 43 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் மருத்துவமனைகளில் 200 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 212 பேரும் என 412 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

காரைக்கால் எம்எம்ஜி நகரைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 676 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 ஆக உள்ளது. இன்று 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 345 (97.31 சதவீதம்) ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 6 லட்சத்து 54 ஆயிரத்து 922 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவற்றில் 6 லட்சத்து 7 ஆயிரத்து 818 பரிசோதனைகளில் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இதுவரை 19 ஆயிரத்து 627 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், 7 ஆயிரத்து 146 முன்களப் பணியாளர்களுக்கும், 17 ஆயிரத்து 393 பொதுமக்களுக்கும் என 44 ஆயிரத்து 166 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே