கொரோனா வைரஸ் விந்தணு மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
இதனால் கொரோனா பாதிப்பு உள்ளவருடன் உடலுறவு கொள்வதன் மூலமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது என கூறப்படுகிறது.
ஷன்குவி முனிசிப்பல் மருத்துவமனையில் 38 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களைப் பரிசோதித்ததில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.
அவர்களுள் 16 சதவீதம் பேரது விந்தணுவில் கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் ஜாமா நெட்வொர்க் இதழில் வெளியாகி உள்ளது.
SARS-CoV-2 வைரஸ் கொரோனா பாதித்தவர்களது விந்தணுவில் உள்ளது என சீன மக்கள் லிபரேஷன் ஆர்மி ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டயாங்கெங் லீ தெரிவித்துள்ளார்.
ஆண்களின் விந்தணுவில் கொரோனா வைரஸால் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்றபோதிலும் இவை கருமுட்டையில் செலுத்தப்படும் சமயத்தில் உடல் நோய் எதிர்ப்பு சக்தி பயன்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா மட்டுமல்ல, எபோலா, சிகா உள்ளிட்ட வைரஸ்களும் ஆண்களின் விந்து செல்லும் பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வைரஸ் தாக்கத்தில் இருந்து நோயாளி முழுவதுமாக குணமானாலும் கூட, வைரஸ் தாக்கம் உடலில் இருந்து நீங்காது. கொரோனாவும் எபோலா போலவே பரவுமா என உறுதியாகக் கூறமுடியவில்லை.
ஆனால் இது ஆபத்தானது. நோயாளியின் எச்சில், ரத்தம், மலம் மூலமும் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது.
உடலுறவு மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க ஆணுறை பயன்படுத்துவது சிறந்த வழி. ஆனால் கொரோனா பரவும் இந்த காலத்தில் பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.