அம்மா கோவிட் -19 வீட்டு பராமரிப்பு திட்டம் – துவக்கி வைத்தார் முதலமைச்சர்

கொரோனா நோய் தொற்று என்று வந்துவிட்டாலே அச்சத்தில் நடுங்கிவிடுகின்றனர்.

வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர்கள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நோயாளிகளுக்காக, அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.

இந்த நேரத்தில் இந்திய நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதாவது, கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தை அவர் காணொளி காட்சியின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

‘அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டம்’ என்னும் இந்தத் திட்டம், கொரோனா அறிகுறிகளுடன் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்த திட்டப்படி, வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை கண்காணிப்பதற்காக, மருத்துவர்கள், செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள் என 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான மருத்தவ ஆலோசனைகளை இணையவழியில் வழங்கவும் ஏற்பபாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தீவிர மருத்துவ சேவை தேவைப்படுபவர்களுக்கு அவசர ஊர்திகளும் வழங்கப்படும்.

எந்த நேரமும் மருத்துவக் கண்காணிப்புடன் இருப்பதால், அச்சப்படவேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தை பிற மாநிலங்களும் பின்பற்றும் அளவுக்கு அற்புதமான திட்டம் என்று பாராட்டுக்கள் குவிகின்றன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே