அமித்ஷா பதவி விலக வேண்டும் – ராகுல்காந்தி கண்டனம்..!!

பெகாசஸ் மென்பொருள் மூலமாக செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து பாராளுமன்றம் முன்பாக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இஸ்ரேலின் உளவு செயலியான பெகாசஸ் மூலமாக இந்தியாவில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரது செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ராகுல்காந்தி ‘ரஃபேல் விவகாரம் தொடர்பான ஆதாரங்களை ஒற்றறிய பெகாசஸை பயன்படுத்தியுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். இந்த ஒற்று விவகாரங்களுக்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே