மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமித் ஷா..!!

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார்.

அவரை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்த அமித்ஷா, பின்னர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

* ரூ.61,483 கோடியில், சென்னை மெட்ரோ ரயிலின் 2வது திட்டத்திற்கு அடிக்கல்

* கோவை அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்டபால திட்டத்திற்கு அடிக்கல்

* கரூர் நஞ்சைபுகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை துவங்கி வைத்தார்.

* சென்னை வர்த்தக மையத்தை ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல்

* ஐஓசி.,யின் 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே