தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி – தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பு..!!

தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறந்த உடன் இலவச பாடப்புத்தகங்கள் இதர நலத்திட்டங்கள் வழங்குவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றார். தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் எனவும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். 

அதேபோல் எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக்கூடாது ; எந்த குழந்தையும் பள்ளியைவிட்டு வெளியேற்றக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை ஆசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே