எல்லா மதமும் சம்மதே, கந்தனுக்கு அரோகரா – ரஜினிகாந்த் ட்வீட்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து  வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அதில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சோமசுந்தரம் என்பவர் அந்த வீடியோவை பதிவு செய்தவர் எனவும், குகன் என்பவர் அந்த வீடீயோவை எடிட் செய்த எடிட்டர் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே யூடியூப்  நிர்வாகத்திற்கு “கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனலை முடக்கவேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீஸ் ஏற்கனவே கடிதம் எழுதிய நிலையில் ,அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்,கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து ,பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

இனிமேலாவது மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்..ஒழியனும் .

எல்லா மதமும் சம்மதமே , கந்தனுக்கு அரோகரா என்று ட்வீட் செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே