டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள்

சமாதானமும் மத நல்லிணக்கமும் நமது பண்பாட்டின் மையக் கருவாக இருப்பதால் டெல்லி மக்கள் அமைதியையும், சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

டுவிட்டரில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள பிரதமர் மோடி. கலவரம் பாதித்த இடங்களில் அமைதியும், இயல்பு நிலையும் விரைவில் திரும்புவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி நிலவரம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியதாகவும், அமைதி திரும்பவதற்கான முயற்சியில் காவல் துறையும் இதர பாதுகாப்பு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே