டிச.4ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்..!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், புராரி மைதானத்திற்கு சென்றால் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித் ஷா விடுத்த அழைப்பை விவசாயிகள் ஏற்க மறுத்து, எல்லைகளில் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

விவசாயிகளின் போராட்டம் இன்று 5வது நாளாக நீடிக்கிறது.

டெல்லியை நோக்கி செல்லும் 5 நுழைவு பாதைகளையும் முடக்கப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே