எகிப்த் பிரமிடுகளை கட்டியது ஏலியன்கள் : எலான் மஸ்க் சர்ச்சை ட்விட்!

“பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டவில்லை. எலான் மஸ்க் நேரில் வந்து இதுகுறித்து ஆய்வு செய்யட்டும்.” என எகிப்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக அதிசயமாகக் கருதப்படும் பிரமிடு குறித்து பல்வேறு கருத்துகள் உலவுகின்றன.

பிரமிடின் கட்டுமானம் குறித்து அறிவியலாளர்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில் சர்ச்சைப் பேச்சுகள் தொடர்கின்றன.

இந்நிலையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவனமாகும்.

இதன் தலைவர் எலான் மஸ்க், ” பிரமிடுகள் நிச்சயமாக வேற்றுகிரகவாசிகளால் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.” எனத் தனது சுட்டுரையில் தெரிவித்திருந்தார். 

இவரின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதமானது.

எலான் மஸ்க்கின் இந்தக் கருத்துக் குறித்து பேசிய எகிப்து வெளிவிவகாரத் துறை அமைச்சர் ரைனா அல் மஸ்கட், “பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பது பற்றி ஆராயவும், பிரமிட் கட்டுபவர்களின் கல்லறைகளைப் பார்க்கவும் நான் உங்களையும், ஸ்பேஸ்எக்ஸ் குழுவினரையும் அழைக்கிறேன்.

நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்.” என பதிலளித்துள்ளார்.

எகிப்து பிரமிடு குறித்து இருவரும் மோதிக் கொள்ளும் விவகாரம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே