ஈரானில் இருந்து புறப்பட்டுச் சென்ற உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான விமான விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 180 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.
ஈரான் நாட்டு தலைநகர் தெஹ்ரானில் இருந்து உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான 737 போயிங் ரக விமானம், 180 பயணிகளுடன் கிளம்பியது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான நிலையத்தின் அருகே அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே, அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், உக்ரைன் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளாகியிருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விமான விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா…? அல்லது திட்டமிட்ட சதியா..? உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.