இந்தியா – பிரிட்டன் இடையிலான விமான சேவை ரத்து ஜனவரி 7ந் தேதி வரை நீட்டிப்பு..!!

பிரிட்டன் உடனான விமான சேவை ரத்து ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவிய நிலையில், டிசம்பர் 31-ஆம் தேதி வரை அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளுக்கும் மத்திய அரசு தடைவிதித்தது.

இந்நிலையில் அந்த தடை உத்தரவை மேலும் நீட்டித்துள்ளது இந்திய அரசு.

அதன்படி, பிரிட்டன் உடனான விமான சேவை ரத்து ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உட்பட இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பலரது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே