மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி..!!

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது;

“தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் 1,650 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை புதிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களுக்கு உடனடியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

அதேபோல், திருவள்ளூர், ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல் மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 800 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே