அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை விந்தியா, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நியமனம்!

அதிமுகவில் அதிரடியாக கட்சி அமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றப்பட்டுள்ளனர், சிலர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ்.இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு

‘அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாகவும், துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அமைப்புச் செயலாளர்கள்:

1. ஏ. கருப்பசாமி பாண்டியன் ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருநெல்வேலி மாவட்டம் )
2. திருப்பூர் ஊ. சிவசாமி, ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், திருப்பூர் மாநகர் மாவட்டம் )
3. இசக்கி சுப்பையா, (முன்னாள் அமைச்சர், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் )
4. புத்திச்சந்திரன் ( முன்னாள் அமைச்சர், நீலகிரி மாவட்டம் )
5. ரத்தினவேல், ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், திருச்சி மாவட்டம் )
6. மருதராஜ் ( திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் )
7. ராஜேந்திரன், ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தென்காசி தெற்கு மாவட்டம் )
8. திருத்தணி கோ. அரி, ( திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் )
9. வாலாஜாபாத் பா. கணேசன், ( காஞ்சிபுரம் மாவட்டம் )
10. ஆசைமணி, ( மயிலாடுதுறை மாவட்டம் )
11. சீனிவாசன், ( திருநெல்வேலி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைத் தலைவர் )

கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள்:

1. மாஃபா. பாண்டியராஜன், ( தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் )
2. பாப்புலர் ஏ. முத்தையா ( திருநெல்வேலி மாநகர் மாவட்டம் )
3. நடிகை விந்தியா ( தியாகராய நகர், தென் சென்னை வடக்கு மாவட்டம் )

இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்

டாக்டர் வி.பி.பி.பரமசிவம், ( வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் துணைச் செயலாளர் )

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள்:

தலைவர் – டி.கே.சின்னையா, (முன்னாள் அமைச்சர், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்)
இணைச் செயலாளர்கள் –

1. ஆ. இளவரசன், ( அண்ணாமலைநகர், திருச்சி )
2. ப. குமாரசாமி, ( திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் )
3. தண்டரை மு. மனோகரன், ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் )

துணைச் செயலாளர் – துரைமுருகன், ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பல்லடம் தொகுதி )

புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் –

மு. சிங்காரம், ( தருமபுரி மாவட்டம்)
எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி
இணைச் செயலாளர் அ. மனோகரன், ( வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி, தென்காசி வடக்கு மாவட்டம் )

மகளிர் அணி

இணைச் செயலாளர் – கணிதா சம்பத், ( செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்)

வழக்கறிஞர் பிரிவு

இணைச் செயலாளர் – பாபு முருகவேல்,( செய்தித் தொடர்பாளர் )

விவசாயப் பிரிவு நிர்வாகிகள்

துணைச் செயலாளர்கள் – முருகமலை சின்னசாமி ( தேனி மாவட்டம் ) , ராமச்சந்திரன் (காமநாயக்கன்பாளையம், கோவை புறநகர் தெற்கு மாவட்டம்)

மருத்துவர் அணி

இணைச் செயலாளர் – டாக்டர் வி.எஸ்.விஜய்,( முன்னாள் அமைச்சர், வேலூர் மாநகர் மாவட்டம்)

தென்காசி தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் – பிரபாகரன்

இவ்வாறு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர பல நிர்வாகிகளை பொறுப்பிலிருந்தும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நீக்கப்பட்டவர்கள் விவரம்:

  • அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ. சோமசுந்தரம்,
  • அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பரஞ்ஜோதி.
  • காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வாலாஜாபாத் பா. கணேசன்.
  • நீலகிரி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆ. புத்திச்சந்திரன்.
  • திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டச்செயலாளர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
  • திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரத்தினவேல்,
  • திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ. மருதராஜ்.
  • திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பிரபாகரன்,
  • அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஆ. இளவரசன்,
  • இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.வி.ரமணா,
  • மாதவரம் ஏ. மூர்த்தி டி.கே.எம். சின்னையா.
  • எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் செல்வ மோகன்தாஸ் பாண்டியன்,
  • வர்த்தக அணித் தலைவர் பொறுப்பில் இருக்கும் அம்மன் மு. அர்ச்சுணன். இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்’.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே