மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் சிறுவேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பொன்னம்பலம்.
தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய வில்லனாக வலம் வந்த இவர் தமிழின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3 லும் கலந்து கொண்டார்.
நடிகர் பொன்னம்பலம் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு நடிகர் கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் உதவி செய்து வருகின்றனர் என்ற தகவல்களும் வெளிவந்தன.
இந்நிலையில் இப்போது உடல்நலம் தேறி வந்துள்ள பொன்னம்பலம் ஒரு தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் ; நான் நிறைய படங்களில் நடித்து நிறைய சம்பாதித்தேன். ஆனால் எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை.
இப்போது சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் 20 முறைக்கும் மேல் தற்கொலைக்கு முயன்றேன். முதலில் சரத்குமார் அவர்களை அழைத்து சிகிச்சைக்கு உதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சரத்குமார் , கமல் ஆகியவர்கள் உதவி செய்துள்ளனர்.
தன்னுடன் நடித்த மிகப்பெரிய நடிகர்கள் எனது சிகிச்சைக்கு உதவி செய்திருந்தால் அது தனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.