நடிகர் சிம்புவுக்கு அவரது தாய் அளித்த இன்ப அதிர்ச்சி..!!

‘ஈஸ்வரன்’, ‘மாநாடு’ என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்புவுக்கு அவரது தாயார் அன்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தை தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

ஓய்வின்றி அடுத்தடுத்த படங்களில் சிம்பு தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேளையில் , அவரது தாயார் உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

நீண்ட நாளாக நடிகர் சிம்பு விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே