உயிரிழந்த சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினி இரங்கல்!

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்தினரை தொடர்புகொண்டு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ்(31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

விசாரணையை தொடர்ந்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்திற்கு திரையுலகினர், விளையாட்டு பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது இரங்கலை தெரிவித்ததாக, ரஜினிகாந்தின் ஆதரவாளரும், அவரின் நெருங்கிய நண்பருமான கராத்தே தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் எந்தவித இரங்கலும், கண்டனமும் தெரிவிக்காமல் இருந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே