கமல்ஹாசனை நேரில் சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்!

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் விளக்கம் அளித்தார். 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

இந்நிலையில், கமல்ஹாசனை நேரில் சந்தித்து நடிகர் லாரன்ஸ் விளக்கம் அளித்தார்.

தமது கருத்து வேண்டுமென்றே தவறாக திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் லாரன்ஸ் தெரிவித்தார்.

இதையடுத்து தமது விளக்கத்தை ஏற்றுக் கொண்ட கமல்ஹாசன், தம்மை அன்புடன் வழியனுப்பி வைத்ததாகவும் லாரன்ஸ் கூறினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே