இன்று வெளியானது பென்குயின் டீசர்!

இந்திய திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகள் சமந்தா அக்கினேனி, டாப்ஸி பன்னு, த்ரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து கீர்த்தி சுரேஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான  ‘பெண்குயின்’   டீசரை வெளியிட்டனர்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெண்குயின்’.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உளவியல் த்ரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம், தனது குழந்தையை காப்பாற்ற ஒரு தாயின் உடல் மற்றும் உணர்ச்சி பயணத்தை பற்றியதாகும்.

இந்த படத்தில் ஒரு குழந்தையின் தாய் என்ற கதா பாத்திரத்திற்கு ஏற்ப உடல் ரீதியாக தன்னை மாற்றிக்கொண்டு சிறப்பாக நடித்திருத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.  

படத்தின் போஸ்டர் ஏற்கனவே பார்வையாளர்களை கவர்ந்துள்ள நிலையில் டீசர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து  இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளான சமந்தா அக்கினேனி, டாப்ஸி பன்னு, த்ரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து  ‘பென் குயின்’ படத்தின் டீசரை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். 

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் தனியார் ஓடிடி தளத்தில் வரும் ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகவும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாக உள்ளது.

Related Tags :

செய்தி ஒருங்கிணைப்பாளர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே