பிராய்லர் கோழியை விரைவாக வளர்ச்சியடையச் செய்வதற்காக தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் துறையின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து மண்டல இணை இயக்குநர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறைசார்ந்த பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பசுக்களுக்கு தீவனம் அளிக்கும் போது பூசனம் படர்ந்திருக்கிறதா என்பதை விவசாயிகள் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.