சென்னையில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்த ஊழியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு கடந்த 26ம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் ஆவின் பண்ணை ஊழியர்கள் பலர் வேலைக்கு வர தயக்கம் காட்டியதாகவும் அந்நாட்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆவின் ஊழியர் இன்று உயிரிழந்துள்ளார்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்புகள் 15 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு குறையும் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பு அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.