“புலிக்குட்டி விற்பனை” வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வச்சு சிக்கிய இளைஞர்..!!

வேலூரில், 25 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைனில் புலிக்குட்டி விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்து வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்த இளைஞரை வனத்துறை போலீசார் கைது செய்தனர்.

வாட்ஸ் ஆப் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு விசாரித்ததில், வேலூர் சார்பனா மேடு பகுதியில் வசித்து வரும் ஆரணியை சேர்ந்த பார்த்திபன் என்பவர், சென்னையில் வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் தமிழ் என்பவருடன் இணைந்து விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விற்பனை செய்து வந்ததும், புலிக்குட்டி விற்பனை தொடர்பாக விளம்பரம் செய்திருந்ததும் தெரியவந்தது.

பார்த்திபனை கைது செய்த வனத்துறையினர், இது வெறும் விளம்பர மோசடியா? அல்லது உண்மையில் புலிக்குட்டி உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே