ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெறலாம் – முதலமைச்சர்

தமிழகத்தில் அதிகரித்து வந்த இரண்டாவது கொரோனா அலையை கட்டுப்படுத்த மே 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்த உத்தரவில், ” ஜூன் மாதம் முதல் அரிசி குடும்ப அட்டைகளுக்கு 13 மளிகை தொகுப்புகள் அடங்கிய பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மளிகை பொருட்களை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நேரடியாக வீடுகளுக்கு வாகனத்தில் சென்று விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு வீடுகளை விட்டு வெளியே வருவோர் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மக்கள் கட்டாயம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இணையவழியில் அல்லது தொலைபேசி வாயிலாக மக்கள் கோரும் மளிகை பொருட்களை வீடுகளில் கொண்டு சென்று விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே