கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் : டிடிவி.தினகரன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என பிரச்சாரத்தில் டிடிவி.தினகரன்  பேசினார்.

கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் பல மோசடி நடைபெறுகிறது. அதனை மக்கள் பொய்யாக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இளைஞர்களின் ஆதரவை பார்க்கும்போது நிச்சயம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைப்பீர்கள் என்று நம்புகிறேன்.நானும் உள்ளுர் காரன் தான், இங்கு நான் குடி வந்துவிட்டால் கோவில்பட்டி தொகுதிவாசியாக மாறிவிடுகிறேன். வாரம் ஒரு முறை கோவில்பட்டி தொகுதிக்கு வந்து மக்களின் குறைகளை கேட்பேன். பத்து வருடங்களாக அமைச்சர் என்ன செய்தார் என்று மக்கள் கேட்கும் வீடியோக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

பெரியகுளத்தில் நிற்கும் போது என்னை வெளியூர்க்காரர் என்று கூறினர். பின்னர் வெற்றி பெற்று அங்கேயே தங்கி இருந்து பணிகளை மேற்கொண்டேன். சட்டமன்ற உறுப்பினராக ஒரு தொகுதியின் தேவைகள் அனைத்தையும் செய்து முடிப்பேன். கோவில்பட்டி தொகுதிக்கு வரும் சீவலப்பேரி குடிநீரில் கழிவுநீர் கலந்து இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் தற்போது வாய்கிழிய குறை பேசுகிறார்கள்.

கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கடம்பூர் ரயில்வே நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், மேம்பாலம் கட்டித்தரப்படும். கடம்பூரில் அரசு தலைமை மருத்துவமனை உருவாக்கித் தருவோம். காமராஜர் அடிக்கல் நாட்டிய கல்லூரியை கட்டித் தருவோம். கடம்பூர் பகுதியில் உள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் தொழிற்சாலை கொண்டு வருவோம். கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் பல மோசடி நடைபெறுகிறது. அதனை மக்கள் பொய்யாக்க வேண்டும் என்றார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே