ரஜினிகாந்தின் 168 வது படத்தின் இசையமைப்பாளரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குகிறார்.
விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்த சிவா, தற்போது ரஜினியின் 168-வது படத்தை இயக்க உள்ளார்.
விஸ்வாசம் படத்தின் பாடல்கள் ஹிட் அடித்ததால் இந்தப் படத்துக்கும் இமானே இசையமைக்க வேண்டும் என்று இயக்குநர் சிவா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டி.இமான் ரஜினிகாந்தின் 168-வது படத்துக்கு இசையமைப்பார் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “முதல்முறையாக ரஜினிகாந்தின் திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைப்பதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளது.