தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்க அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் 30 தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் அவர் பேசியதாவது, கரோனாவுக்கு எதிரான போரில் அரசுடன் இணைந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கரோனா விழிப்புணர்வு பணிகளிலும் அரசுடன் தொண்டு நிறுவனங்கள் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

