கவின் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள்

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிஃப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை தமிழ் சினிமாவின் 6 முன்னணி இயக்குநர்கள் இணைந்து வெளியிட உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழ் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட கவின் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். பின்னர் வினீத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கவின். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது படக்குழு.

லிஃப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட உள்ளனர். இதனிடையே சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றிய கவின், பிக்பாஸ் 3 வின்னர் முகென் ராவ் ஹீரோவாக நடிக்கும் ‘வேலன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே