8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2020 தொடரில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை அடித்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 50 ரன்கள் அடித்தார். இது அவருக்கு 39 ஆவது ஐபிஎல் அரை சதமாகும்.

146 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டூ பிளசிஸ், ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் அடித்தனர்.

டூ பிளசிஸ் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு 39 ரன்கள் அடித்தார்.

இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 65 ரன்கள் அடித்தார். இது அவருக்கு முதல் அரை சதமாகும்.

இறுதியில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.4 ஓவர் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 8 புள்ளிகளை பெற்று ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்துக்கு முன்னேறியது சிஎஸ்கே அணி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே