மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், மூத்த அரசியல் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் இரா நல்லகண்ணு நேற்று (20.08.2020) இரவு சளி, காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்,

அவர் தற்போது நலமுடன் இருக்கிறார்.

கட்சியினர் மற்றும் நண்பர்கள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் பார்த்தும் நலம் விசாரிக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

94 வயதான நல்லகண்ணு தற்போது சென்னையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே