பூமிக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து : அலட்சியப்படுத்தினால் அழிவு நிச்சயமாம்

காற்றில் இருக்கவேண்டிய நுண்ணுரிகள் அளவு ஒரு கியூபிக் மீட்டருக்கு 10,000 காலனிகளே,,. 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 58,827 என்ற அளவில் இருந்தது.

வாகனங்கள், கட்டுமான பணிகள், கழிவுகள் அல்லது குப்பைகளை எரித்தல் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் காற்று மாசுவை மட்டுமே நாம் மாநகரின் காற்று மாசுவுக்கு முக்கிய காரணங்களாக கூறி வருகிறோம் ஆனால் நாம் கவனிக்காத ஆனால் காற்று மாசுவிற்கு முக்கிய காரணிகளாக விளங்கும் சிலவற்றையும் இப்போது பார்ப்போம்.

மூடப்படாத கழிவுநீர் கால்வாய்கள், திட கழிவுகள் மேலாண்மையில் தோல்வி, நிலப்பரப்புகள், ஏரிகள் மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு ஆகியவையும் மாநகரில் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல்துறை ஒரு ஆய்வை மேற்கொண்டது அதில் காற்றில் பரவும் திட மற்றும் திரவ மாசு 2010 ஆம் ஆண்டில் இருந்து அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகிறது. இதற்கு காரணங்களாக திறந்த நிலையில் இருக்கும் கழிவு நீர் கால்வாய்கள் தான் என்றும் அதிலிருந்து பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் வேகமாக காற்றில் பரவுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நுண்ணுயிரிகள் எல்லா நீர்நிலைகளிலும் வாழக்கூடியதாகும். அதாவது நல்லநீர் சேமிக்கப்பட்டுள்ள குளங்கள், எரிகள், கழிவுநீர்கால்வாய்கள் ,செடிகொடிகள், மனித மற்றும் விலங்கு கழிவுகள் என எல்லா இடங்களிலும் இவை வாழக்கூடியது 25 சதவிகிதம் காற்றில் பரவும் திட மற்றும் திரவ மாசு இந்த நுண்ணுயிர்களால் தான் ஏற்படுகின்றது என்கிறது ஆய்வு அறிக்கை

இந்த திட மற்றும் திரவ மாசு 0.3 மைக்ரான் என்ற அளவு முதல் 100 மைக்ரான் என்ற அளவு வரை தற்போது காற்றில் கலந்துள்ளதாகவும் இதில் சிறிய மைக்ரான் கழிவுகளால் தான் நமக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது, ஏனெனில் சிறிய அளவில் உள்ள மாசு காற்றில் கலந்து நம் சுவாசப்பாதையை மற்றும் நுரையீரலை நேரடியாக சென்றடையும். ஆனால் பெரிய அளவில் உள்ள மாசு அப்படிசெல்ல முடியாமல் நம் சருமத்தின் மீதே இருக்கும் என்று மருத்துவ நுண்ணுரிகள் குறித்த இந்திய செய்தி நிருவனம் தான் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கழிவு சேகரிக்கும் தொட்டிகளில் இருந்து வரும் துர்நாற்றத்தில் இந்த திட மற்றும் திரவ மாசு கலந்திருக்கும். மாநகரை சுற்றி அப்புறப்படுத்தாத குப்பை குவியலாக ஆங்காங்கே சேர்ந்துள்ளது இதில் இருந்து திட மற்றும் திரவ மாசு காற்றில் அதிகமாக கலக்கும். இது நம் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும். இதற்கு பொதுமக்களும் அரசாங்கமும்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு யெல்லப்ப ரெட்டி தெரிவித்தார்.

காற்றில் இருக்கவேண்டிய நுண்ணுரிகள் அளவு ஒரு கியூபிக் மீட்டருக்கு 10,000 காலனிகளே ஆகும். 2010 ஆம் ஆண்டு காற்றில் அனுமதிக்கப்படுள்ள நுண்ணுயிரிகள் அளவு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 58,827 என்ற அளவில் இருந்தது ஆனால் அதுவே 2017 ஆம் ஆண்டு ஒரு கியூபிக் மீட்டருக்கு 83,256 என்ற அளவில் அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

வீடுகள்தோறும் சரியாக கழிவுகளை கையாளாதது, திடக்கழிவுகள் மேலாண்மையில் தோல்வி, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை, ஆகியவையே காற்றில் திட மற்றும் திரவ மாசு அதிகம் கலப்பதற்கான காரணங்களாக அமைகிறது.

பெங்களூரு பல்கலைக்கழகம், மாநகரில் உள்ள பைரமங்கலா நீர்தேக்கத்தின் நீர் மாதிரிகளை சோதனை செய்து பார்த்ததில் அவை விவசாய பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்றும், உலக சுகாதார நிறுவனம் அனுமதித்த அளவைவிட அதிக அளவில் இ-கோலி, ஸ்டெப்டோகோலி ஆகிய நுண்ணியிரிகள் இந்த நீரில் கலந்து இருப்பது தெரியவந்தது.

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நந்தினி இதுபற்றி கூறுகையில், காற்று மாசுவில் 2.5 மைக்ரான்களை விட குறைவாக உள்ள துகள்கள் மனிதர்களின் சுவாசப் பாதையை எளிதாக சென்றடையும், இது உடல்நலத்துக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதே மாசுபாட்டு பிரச்சனையை தான் பெங்களூரு போன்ற பல பெரிய மாநகராட்சிகள் சந்தித்து வருகின்றன.

மேலும், மாசடைந்த காற்றில் கலந்துள்ள பேக்டீரியா போன்ற நுண்ணியிர்கள், நாம் சுவாசிக்கும்போது காற்றில் கலந்து நுரையீரலில் சென்றடைகிறது. இதனால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு தொடர்பான பல நோய்கள் ஏற்படுகிறது என்றும் நந்தினி கூறுகிறார்.

வீட்டிலுள்ள திட மற்றும் திரவ மாசு

காற்றில் மட்டுமின்றி திட மற்றும் திரவ மாசுக்கள் நமது வீடுகளிலும் உள்ளது. முறையான காற்றோட்டம் இல்லாத கட்டுமானங்களில் தான் பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. சுவர்கள், சீலிங், தரைகள் போன்றவற்றில் கண்ணுக்கே தெரியாத ஓட்டைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் காற்றோட்டமில்லாத அறைகளாக மாறுகின்றன. இதனால் வீட்டினுள் காற்று மாசு அதிகமாகிறது. மேலும், வீட்டுக்குள் சராசரி வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பதிலும் நாம் பின்தங்கி விடுகிறோம்.குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள இயந்திரங்களை சரியாக பராமரிக்காததால், அவற்றின் மீது நுண்ணியிர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதே நிலைதான் ஏசி. வசதியுடைய பேருந்துகள், ஏ.சி. திரையரங்குகளிலும் ஏற்படுகிறது என நந்தினி கூறுகிறார்.

உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்புகள்

காற்றில் கலந்துள்ள திட மற்றும் திரவ மாசுக்களால் மனிதர்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய், சுவாசக்கோளாறுகள் , பேக்டீரியா, வைரஸ், நுண்ணியிர் மூலம் ஏற்படும் தொற்று நோய்கள் அதிகரிக்கிறது. அதேபோல மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது. சிறுநீர் வெறியேறும் பாதையிலும் தொற்று ஏற்படுகிறது என பெங்களூரு பல்கலைக்கழக ஆய்வறிக்கை கூறுகிறது.

காற்றில் கலந்துள்ள திட மற்றும் திரவ மாசுக்களை கட்டுப்படுத்த பல வழிகள் இருக்கிறது. சரியான காற்றோட்டம் இருக்கும் வகையில் கட்டுமானங்கள் அமைக்கப்பட வேண்டும். உயர்தர காற்று சுத்திகரிப்பான்களை பயன்படுத்த வேண்டும். கிருமிநாசினி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் வீட்டின் உட்புற மாசுக்களை கட்டுப்படுத்தலாம் என்று பெங்களூரு அறிவியல் மையத்தின் குழந்தை நல மருத்துவர் சசிதரன் கங்கையா தெரிவித்துள்ளார்

ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூய்மையாக வைத்திருத்தல் திடக்கழிவு மேலாண்மையை சரிவர செயல்படுத்துதல், சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருத்தல் ஆகியவற்றை செயல்படுத்தினால் மட்டுமே சுற்றுப்புறத்தில் உள்ள திட மற்றும் திரவ மாசுக்களை கட்டுப்படுத்த முடியும் என்று நந்தினி தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே